Monday, June 27, 2011

வேட்டை

அடடா கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா!! என்று நான் ஏதோ புலி வேட்டைக்கோ, யானை வேட்டைக்கோ, அல்லது சுடலை மடச்சாமி போல் “சாமியும் நான் தான் பூசாரி நான் தான் “ என்று சாமி வேட்டைக்கோ போக புறப்பட்டு விட்டதாக தவறாக எண்ணவேண்டாம்.  ஒரு வழியாக வெளிநாட்டில் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தாய் நாடாம் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முடிவுசெய்தோம்.  சரி முதல் படி குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு செய்வது என்று ஆரம்பித்தோம்.  அப்பொழுதுதான் ஏற்கனவே இக்கடலில் நீந்தி மீன் பிடித்த நல்ல நண்பர்கள் சிலர் கூறினர்,” பள்ளியை நீங்கள் தேர்வு செய்வது இல்லை முறை , பள்ளிதான் உங்களை தேர்வு செய்யவேண்டும்.”என்றார்கள்.  முதலில் இதனை விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டோம்.  ஆனால், கடலில் குதுத்த பிறகு தான் தெரிய வந்தது இது ஒரு வேட்கைக்களம் என்று.  முதலில் நாங்கள் எங்கள் அறிவுக்கு எட்டிய வரைக்கும் நல்ல பள்ளிகள் யாவை என்று ஒரு லிஸ்ட் எடுத்தோம்.  விடுமுறைக்கு இந்தியா சென்ற பொழுது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அப்பள்ளிகளை சுற்றி பார்த்து வருவோம். பார்த்தபின் எது நன்றாக இருக்கிறதோ அதில் நம் பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்று ஒரு கற்பனையில் மாநகராம் சென்னைக்குச் சென்றோம்.  ஆஹா எத்துனை மாதிரி பள்ளிகள்?? இப்பொழுது பல பள்ளிகளில் “international" என்று ஒரு அடை மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது . அப்பொழுதுதான் ”என்.ஆர்.ஐ”  மக்களை கவரமுடியுமாம்.  தரத்தில் internationalஆ என்று பார்த்தால் சந்தேகமே.  முதல் வித்தியாசம், வெளிநாடுகளில் ஒரு பள்ளிக்குச் சென்று அனுகினால், அவர்கள் முதலில் நம்மை பள்ளியை சுற்றி காண்பிப்பார்கள். Classroom, canteen, toilet, playground, sickbay(nurse room) என்று அனைத்தையும் காண்பிப்பார்கள்.  சிரித்த முகத்துடன் ஒரு உபசாரம் இருக்கும்.  உங்கள் குழந்தைக்கு இது ஏற்ற பள்ளியா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று முடிவை நம்மிடம் விட்டு விடுவார்கள்.  ஆனால் சென்னையில் நாங்கள் சென்ற பள்ளிகளில் எல்லாம் எங்களை ஏதோ சந்தேகப்பிறவிகள் போல் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டார்கள்.  Indian Parliamentக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு இருக்குமா என்பது சந்தேகமே.  என்ன கைகளில் துப்பாக்கி ஏந்திய காவளாளிகள் பள்ளி வாசலில் இல்லை.  அப்படியே உள்ளே விட்டாலும், பிரின்சிபல் அறை அல்லது அலுவலக அறை வரையிலும் தான் அனுமதி.  பள்ளியைப்பற்றி information வேண்டுமானால் 500, 1000 என்று செலுத்தி application form வாங்கினால் அதனுடன் பள்ளியைப்பற்றிய prospectus கிடைக்கும்.  இப்பொழுது இந்திய சந்தையில் வேலை கூட கிடைத்துவிடும் ஆனால்  நாம் விரும்பும் பள்ளியில் அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. 2011-2012க்கான அட்மிஷனுக்கு 2010ல் முயற்சி செய்ய வேண்டுமாம்.  பல பள்ளிகளில் குழந்தை பிறப்பதற்கு முன்பே முயற்சி செய்ய வேண்டுமாம்.  கலி முற்றி விட்டது என்றால் இது தானே.  இவ்வளவு பந்தா செய்யும் பள்ளிகளில் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருகிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது.  கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைத்தால் இன்றும் மனம் பத பதக்கிறது.  பள்ளிகளில் விபத்துக்கான பாதுகாப்புகள் இருக்கிறதா என்று சுற்றி பார்த்தால் தானே தெரியும்.  ஏன் இதனை பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? பள்ளி என்பது ஒரு வியாபாரக்கூடம் இல்லை. இரு பக்கமும் புரிதல் மிக மிக அவசியம். அட்மிஷனுக்கு அனுகும் பொழுது ஏதோ நமக்கு favour செய்வது போன்று அலுத்துக்கொள்கிறார்கள்.  ஏதோ பணமே வாங்கிக்கொள்ளாமல் சேவை செய்வதைப்போன்ற ஒரு நிலமை.  என்று மாறுமோ இந்த நிலமை???