Wednesday, March 28, 2018

Into the Woods!


You and me in a rosy gown
with flower prints and lace stitched around,
walk into the woods swinging
a tightly weaved bamboo basket
with a half moon handle!

One hand holds the basket
the other hand holds you tight,
Not to get lost in the wild!
Dark green, light green, lemon green,
shades of green all around!

Pretty small scarlet flowers
peep from thick green bushes!
The breeze is filled with
the scent of wild roses and herbs!

Cute , furry little bunnies
with round,sparkling red eyes,
run here and there out of fear!
Birds of different colours
flap their wings to the music of the wind!

White spot deer hiding behind the bushes
 are ready to play hide and seek with us!
Walking through the woods,
we pick sweet and sour berries
to fill our bamboo baskets!

A clear silver stream makes it way in silence
so as not to wake up
the sleeping pebbles under it's bed!
You and me wet our feet
in the icy chill wild stream!

We hold some water cupping our palm
with most of it running between our fingers!
We wash our face and sip a little of the magical water
and feel fresh as the wild flowers
and happy as the butterflies!

We walk along the trodden path
still with hands held tight!
Neither do you know nor do I know,
What are we searching for?
Are we looking for the start of the stream?
Or for the one who painted the wild with green?
Or for the musician who plays through the wind?
Or are we looking for
the unknown joy of the untouched wilderness????

Monday, March 26, 2018

”பித்து”



சமீப நாட்களாக எனக்கு பிடித்திருப்பது (என் குடும்ப உறுப்பினர்கள் கூற்றுப்படி) கோலப் பித்து. ஆம் ! புதிதாக நான் ஒரு ஸ்லேட் வாங்கினேன். வாங்கியது என்னவோ அன்றைய வேலைகளை எழுதி வைத்தாவது செய்யலாமே என்ற நல்ல எண்ணத்தில் தான். இதில் என் தோழி உமாவும் கூட்டு. இருவருமாக ஆளுக்கொரு ஸ்லேட் வாங்கி வந்தோம். சில நாட்கள் அதில் அன்றைய சமையல் முதல் என்ன என்ன வேலைகள் செய்ய இருக்கிறது என்பது வரை எழுதி வைத்தேன். சமையல் எழுதியபடி நடந்தது. ஆனால் அந்த to-do list டுட்டுடூ ஆனது. அது எழுதியது எழுதியதாகவே இருந்தது. அதை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு குற்ற உணர்வு. அதற்காக உடனே எழுதியபடி செய்ய துவங்கினேன் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். என் தோழியிடம் கேட்ட பொழுது தான் தெரிந்தது இருவரும் ஒரே படகில் பயணித்தோம் என்று.

சரி ஸ்லேட் வாங்கியாகிவிட்டது அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று ஒரே யோசனை. சின்ன சின்ன சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். நான் சிறுமியாக  இருந்த பொழுது என் சின்ன அத்தை அழகழகாக சிக்கு கோலம் போடுவார்கள். அதுவும் வாசல் நிறைய புள்ளி வைத்து போடுவார்கள். அந்த சாணம் தெளித்த வாசலில் வெள்ளை கோலமாவில் புள்ளி வைத்து போடும் சிக்கு கோலம் வசீகரமாக இருக்கும். எனக்கு பார்த்து ரசிக்க தெரிந்ததே தவிர போட தெரியவில்லை. நமக்கு தெரிந்த கோலம் எல்லாம் ஸ்டார், பூ, பொங்கல் பானை அவ்வளவு தான். காலம் போன கடைசியில் ஸ்லேட்டில் சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். இதுவும் ஒரு அனுபவமாகவே இருக்கிறது.

சாதாரணமாக நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் காலைவணக்கம் செய்தி அனுப்புவது வழக்கம். வெட்டியாக இருப்பதால் தான் இதனை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் கணவரின் வாதம். அதற்காக நான் அந்த பழக்கத்தை விடவில்லை. அதை நெருங்கியவர்களுக்கு அனுப்பும் பொழுது ஒரு சந்தோஷம். வெறும் குட் மார்ணிங் என்று அனுப்புவதற்கு பதில் ஒரு கோலம் போட்டு அனுப்பினால் என்ன  என்று தோன்றியது. அடுக்குமாடி குடியிருப்பின் சிறு வாசல்களில் போடுவதெற்கென்றே அழகிய சிறு சிறு புள்ளிக் கோலங்கள் நெட்டில் உள்ளன. அவற்றைப் பார்த்து ஸ்லேட்டில் வரைந்து குட் மார்ணிங் என்று எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் போட்டால் பேப்பர் போடுபவர் ஏதோ சபதம் எடுத்ததைப் போல் தினம் தினம் கோலத்தின் மேலேயே செய்தித்தாளைப் போட்டுவிட்டு போகிறார். இப்படி ஸ்லேட்டில் போட்டு படம் பிடித்து அனுப்புவதால் பல பேர் பார்க்க முடிகிறது.  பல நண்பர்கள் அதை ரசித்தார்கள். அழகிய இமோஜிகள் அனுப்பி வாழ்த்தி, உற்சாகப்படுத்தினார்கள். சில நண்பர்கள் என் ஸ்லேட் கோலத்தைப் பார்த்து வாசலில் போட ஆரம்பித்தார்கள். வாழ்க்கையே ஒருவரை ஒருவர் பார்த்து கத்துக் கொள்வதுதானே!

நான், ”என் நண்பர்கள் என் கோலம் அழகாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்”, என்று உற்சாகத்துடன் கூறினால் என் கணவர்,”நீதான் உனக்குனு ஒரு ஜால்ரா கோஷ்டிய வச்சு இருக்கியே,”என்று சர்வ சாதாரணமாக கூறிவிடுவார். நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு என் கோலப்பித்தை தொடர்ந்தேன்.

முதல் சில நாட்கள் வீட்டில் வைத்தே ஸ்லேட்டை படம் பிடித்து அனுப்பினேன். என் தோழி அங்கை என்பவர் மிக அழகாக  பல விஷயங்களை படம் பிடித்து அனுப்புவாள். அவளின் புகைப்படங்கள் கண்ணை கவர்பவையாக இருக்கும். அவளைப் பார்த்து நானும் படம் எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன். என் இன்னொரு தோழி பூஜா படம் எடுக்கும் போது ஃபோனை எப்படி பிடித்து எடுத்தால் அழகாக வரும் என்று சொல்லிக்கொடுத்தாள். எப்படி எடிட் செய்வது என்பதெல்லாம் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.

வீட்டுக்குள் படம் எடுத்து போர் அடிக்கிறதே என்று சில நாள் கீழே சென்று புள்வெளியில் ஸ்லேட்டை வைத்து படம் எடுத்து அனுப்பினேன். அன்று எனக்கு ஒரு யோசனை. புல்லில் வைத்து எடுப்பதற்கு பதில் நீச்சல் குளத்தில் ஸ்லேட்டை மிதக்கவைத்து எடுத்தால் என்ன என்று தோன்றியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. நான்,, கோலம் போட்ட ஸ்லேட், மழைதூரல் பட்டு அழிந்து விட்டால் மறுபடியும் கோலம் போட சாக்பீஸ் , துடைக்க ஒரு டிஷ்யூ பேப்பர் எல்லாம் எடுத்துக் கொண்டு நீச்சல் குளம் நோக்கிச் சென்றேன்.பெரியவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் எடுக்கலாம் என்று முதலில் யோசித்தேன். ஸ்லேட்டை மிதக்கவிடும் முயற்சியில் நான் உள்ளே விழுந்துவிட்டால் ,அச்சோ நமக்கு நீச்சலும் தெரியாது, மழைத்தூறும் காலை வேலை, ஞாயிற்றுக் கிழமை வேறு,  யாரும் அந்த காலை நேரத்தில்  காப்பாற்றக்கூட வரமாட்டார்களே!  நான் கீழே சென்றது கணவருக்கோ, மகனுக்கோ தெரியவும் தெரியாது. இருவரும் இழுத்து மூடிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்கள்.  தண்ணீருக்குள் விழுந்தால் ஸ்லேட்டைப்போல் நானும் சில நொடிகளில் மிதக்க நேரிடும். என் உயரத்திற்கு நீச்சல் குளத்தின் மிகவும் குறைந்த ஆழத்தில் நான் விழ நேர்ந்தாலும் ஜல சமாதிதான்.

 எனவே அந்த யோசனையை கைவிட்டு விட்டு, குழந்தைகள் விளையாடும் நீச்சல் குளத்தில்  ஸ்லேட்டை மிதக்கவிட்டு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அதன் ஆழம் என் உயரத்திற்கு ஏற்றதாக இருக்கும். கனுக்காலுக் கொஞ்சம் மேல் தான் தண்ணீரின் அளவு. உள்ளே இறங்கினாலும் முட்டிக் கூட நனையாது. மெதுவாக கீழே குணிந்து ஸ்லேட்டை  தண்ணீரில் மிதக்க விட்டேன். கையில் இருக்கும் ஃபோன் மழைத்தூரலில் நனைந்துவிடுமோ என்று வேறு கவலை.  அந்த நீல நிற தண்ணீரில் ஒரு சிறு படகைப்போல் என் ஸ்லேட் கோலத்தோடு 
அழகாக  மிதந்தது.  மழைத்தூரல் பட்டுவேறு கோலம் அழியத் துவங்கியது. உடனே ஸ்லேட்டை எடுத்து அழிந்த இடங்களை மீண்டும் வரைந்து மெதுவாக மிதக்கவிட்டு படம் பிடித்தேன். 

யாரும் பார்ப்பதற்கு முன்  நனைந்த ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்தவுடன் கணவர் கையில் ஆவி பறக்கும் காப்பியுடன்,”காலையில எங்க போன?”என்று கேட்டார். நான் என் ஸ்லேட்டை பெருமையாக காண்பித்து,”நான் ஸ்விம்மிங் பூல்ல ஸ்லேட்டை மிதக்கவிட்டு போட்டோ எடுத்தேன் தெரியுமா,”என்றேன்.உடனே அவர்,” அடிப்பாவி, ஆரம்பிச்சுட்டியா ?”என்றார். எதை நான் ஆரம்பித்துவிட்டேன் என்று நான் கேட்கவில்லை. எதற்கு நாமாகவே நாக்கில் இருக்கும் சனியை வெளியில் இழுத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம். எடுத்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்த்தேன். ஆஹா இது என்ன பிள்ளையார்  பிடிக்கப்போய் குரங்கான கதையாகி போய்விட்டதே!, என்று மனம் நொந்து போனேன். படத்தை பார்த்தால் நான் எதிர்ப்பார்த்தது போல நீச்சல் குளத்தில் எடுத்ததை போல் வரவில்லை. ஏதோ பாத்ரூம் டைல்ஸில் வைத்து எடுத்தது போல் இருந்தது. நீச்சல் குளத்தின் தரையில் பதித்திருந்த நீல நிற டைல்ஸ் அசிங்கமாக படத்தில் தெரிந்தது.  எனக்கே பிடிக்கவில்லை. உடனே ஸ்லேட்டை ஒரு தலையணை மீது வைத்து படம் பிடித்து என் குட்மார்னிங் மெசேஜை எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.

சிறிது நேரம் கழித்து என் மகன் எழுந்து வந்தான். அவனிடம் நான் எடுத்த படத்தை காண்பித்து ,”ரிஷி இது எப்படி இருக்கு என்றேன்?” அதற்கு அவன்,”அம்மா , what is this new obsession of yours?"என்றான். ”நல்லா உங்கம்மாவ கேளுடா இப்போ புதுசா இந்த கோலப் பித்து பிடிச்சு இருக்கு அவளுக்கு,”என்றார் கணவர் .  நான் முறைத்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.  அவன் மிகச் சாதாரணமாக இக்கேள்வியை கேட்டுவிட்டு போய்விட்டான். ஆனால் நான் அதனை நாள் முழுதும் அசைப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவர்கள் கூறுவது போல் இது என்ன புது பித்து எனக்கு?, கொஞ்சம் நாள் சமையல் பித்து, கொஞ்சம் நாள் படம் வரையும் பித்து, கொஞ்சம் நாள் வீட்டை சுத்தம் செய்யும் பித்து, கொஞ்சம் நாள் புத்தகம் வாசிக்கும் பித்து! இப்பொழுது கோலப்பித்து! ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு பித்து என்னை ஆட்டுவித்துக்கொண்டே இருக்கிறது. இது எனக்கு மட்டும் தானா? ஏன் இவர்களுக்கு இல்லையா?

மகன், சில வருடங்கள் கார் மேல் பித்தாகி இருந்தான், சில வருடங்கள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் பித்தாக இருந்தான், சில வருடங்கள் தாமஸ் ட்ரெயின் பித்தாக இருந்தான், சில வருடங்கள் பென் டென் பித்தாக இருந்தான், சில வருடங்கள் ட்ரான்ஸ்பார்மர்கள்.இப்படி சில சில வருடங்கள் ஏதோ ஒன்றின் பால் அவனின் ஈர்ப்பு இருந்திருக்கிறது. கணவரும், சில காலம் பேலியோ டையட், சில காலம் சைக்கிள் பித்து, சில காலம் யோகா பித்து, சில காலம் படப்பித்து என்று இருந்திருக்கிறார், இப்பொழுதும் இருக்கிறார். அவர்கள் ஒரு செயலுக்கு அடிமையாகும் பொழுது அது “ஈடுபாடு” என்று பெயரிடப்படுகிறது. இதுவே இருபது ஆண்டுகளுக்கு மேல் தன் ஆசைகளை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, தன் சுயம் மறந்து அவர்களின் பித்துக்களுக்கெல்லாம் உயிர் கொடுத்த நான் இப்பொழுது எனக்காக , எனக்கு பிடித்த விஷயத்தை நான் செய்ய முயற்சிக்கும் பொழுது அது “பித்து, அப்செஷன்”என்று பழிக்கப்படுகிறது.

நான் வரையும் படங்களை, எடுக்கும் புகைப்படங்களை, போடும் கோலங்களை பார்த்துவிட்டு என் தந்தை என் அம்மாவிடம்,”பாவம், அவளுக்கு ரொம்ப போர் அடிக்குது போல.என்ன செய்யறதுனு தெரியாம ஏதாவது செஞ்சுகிட்டு இருக்கா”, என்றாராம். அவருக்கும் புரியவில்லை என் தேடல் எது என்பது. அவருக்கு தெரியவில்லை வீணாக பொழுதை கழிக்காமல், வெட்டிக் கதை பேசாமல், ஊர் வம்பு இழுக்காமல், என்னை நானே பிசியாக வைத்துக்கொள்ள நான் கற்றுக்கொண்டு வருகிறேன்  என்று.

என் விருப்பங்கள் , என் திறமைகள் என்ன  என்பதே எனக்கு மறந்து போய் காலம் பல ஆகிவிட்டது. இப்பொழுது அரை கிணற்றைத் தாண்டும் வயதாகிவிட்டது. இப்பொழுதுதான் நான் யார், எனக்கு என்ன பிடிக்கும், என்ன செய்தால் எனக்கு சந்தோஷம் , என்னவெல்லாம் என்னால் செய்ய முடியும்  என்று நான் எனக்கு நானே கேட்டுக்கொண்டு தேட ஆரம்பித்திருக்கிறேன். என் தேடலின் வழியில் என்னை தாங்கிப் பிடிப்பவர்களின்  துணை எனக்கு தூணாய் தோன்றுகிறது. இந்த தேடல் என்னை இளமையாக உணரச்செய்கிறது. இந்த கற்றலில் நான் செய்யும் தவறுகள் என்னை பின்வாங்க செய்யவில்லை. புதுப் புது விஷயங்களை தேடத் தூண்டுகிறது. என் ரசிகையாய் என்னையே மாற்றுகிறது.

பிள்ளைகள் நாளை நம்மை விட்டு சென்றப்பின் அந்த வெற்றிடத்தை நிறப்ப, எனக்கு நானே பொழுதை கழிக்க தெரிந்திருக்க வேண்டும். தனித்தனி தீவுகளாக வாழும் இக்கால கட்டத்தில் யாரையும் சார்ந்து இல்லாமல் நமக்கு நாமே துணையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.   அதனால் தான்  நான் என்னுள் என்னை தேடுகிறேன். அந்த தேடல் அழகாக இருக்கிறது, புது அனுபவமாகவும் இருக்கிறது. நீங்களும் என்னுடன் கைகோர்த்து உங்களை தேட ஆரம்பியுங்கள். சேர்ந்தே நாம் பயணிக்கலாம்!!!! பயணம் இனிதாக அமையும்!!

Friday, March 23, 2018

Wine glass with ABC Juice!


Wine glass with ABC Juice!

It was scorching sun and it was making my eyes burn. Wanted to make the much hated ABC juice for Rishi and me. After making it I wanted to take a picture so that I could post it on my Instagram and also wanted to send it to a few of my friends to make them feel motivated to make the same juice .

.The recipe was passed on by my friend Suganthi to me. She is a very good cook and my kids love her food. She said if you drink it you can feel rejuvenated and energetic and that your skin will shine. The first time I made this juice and poured it in a clear glass and gave Rishi, he was very excited to taste it. I didn't tell him what it was. He assumed that it was grape juice or that it must be pomogranate juice. The minute he put his lips on the glass and took a sip he closed his eyes and pulled his nose and cheek up. I was waiting there looking at his face for his reaction. He said"Maaaaa What kind of a juice is this?" I told him the fancy name "ABC Juice". He said "What the heck is ABC juice? It tastes horrible. I thought it was some grape juice." I said that it was very good for his health and that it had apple, beetroot and carrot in it.

Knowing the fact that he would drink anything to get rid of his pimples I told him that it would clear his face of the acne. None of my marketing techniques and health advice worked that day. Finally I took my wand of "I am the mom just listen to whatever I say and drink it." Yes! that worked. He drank it like some kind of poison with an extra effort of acting to puke. I didn't bother to any of his actions since all I wanted was to push it down his throat and I succeeded in it. After he finished he was about to put the glass in the sink with a big bang to show his frustration but I was quick enough to stop him from doing it. Still he kept the glass in the sink and pressed it hard. He asked me," Who was the one who taught you this juice mama?" Thinking that if I say Suganthi's name I will be saved ,I proudly said,"Sugan aunty Rishi. She gave me the recipe." He immediately reacted with a ."What ? I thought Sugan aunty always makes good stuff. When did she become like you?" This was the last feather added that day to my "Mean Mother Hat".

Today when I made this juice again he came from school and said,"Mama agaiiiin the same juice? Pls Iet me have plain ice water or make me plain lemonade." He knows that if mom has decided a menu for the day it will definetely be on the table. He had no other choice. I asked him whether he wanted it in a fancy glass or an eversilver tumbler. "Enough of a tumbler." That "enough " did imply many meanings. I gave him in a tumbler and poured the remaining in a wine glass . It looked like wine. Was excited to see the beautiful colour. I asked him to take a picture of me holding the cup. He totally refused to do that . I tried taking a selfie. It was horrible than the pictures that Rishi takes of me. So I decided to take a picture of just the glass.

First I held it in my hand and took a picture. I was not satisfied by the outcome. Next I tried holding it outside the window so that I could focus the pool, the sunlight , the sky all at the same time. That picture looked even more worse. Then I placed the glass on the metal hinges of the window . When I placed it my hands shook and my heart beat was hundred times more. It went dhak dhak dhak quite fast. I was sooo scared that it might fall down. What if it falls on someone's head? I live in the eighth floor . I looked down and made sure no one was down. Since it was mid day usually no body walks at that time of the day . But there was no guarantee that nobody will be walking for sure. After making sure that nobody was down I tried to place it safely on the hinges. I made sure that it stood there with full support and prayed that there shouldn't be any wind till I took the picture.  When I saw the glass through my phone's camera I got goosebumps on my hands Somehow with my shaking hands I captured the glass standing on the hinges . I could feel my heavy breath ! I clicked continuously a few times so that I have a few pictures to select from. After taking the shot I took the glass from the window with so much care and put it on a levelled surface.Checked whether the picture had come out as expected. Hurray !! I did it !!yes I had managed to capture the sky, the sunlight and the swimming pool at the background. Felt very proud of myself for having successfuly taken a picture without letting the wine glass with the ABC juice go dowwnnnn the air!

Saturday, March 17, 2018

என் வார பிராஜக்ட்!!



என் வார பிராஜக்ட்!!
இன்று வெள்ளிக்கிழமை.என்னுடைய வார ப்ராஜக்ட் செய்யும் நாள். என்னடா இவள் வாரா வாரம் அப்படி என்ன ப்ராஜக்ட் செய்கிறாள் என்று நீங்கள் நினைப்பது என் மனக்கண்ணுக்குத் தெரிகிறது. வெள்ளிக்கிழமையானால் இட்லிக்கு மாவு அரைக்கும் ப்ராஜக்ட் தான் என் வார பிராஜக்ட். என் அப்பா ஒரு முறை என்னிடம் ,” ஏம்மா, உங்க வீட்ல யாரக்கேட்டாலும் ப்ராஜக்ட் பண்றேன் , ப்ராஜக்ட் பண்றேனு சொல்றாங்க. அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துகிட்டு ரவியும் ப்ராஜக்ட் மாமானு சொல்றார், ஏழாவது படிக்கிற உன் பையனக் கேட்டாலும் ப்ராஜ்க்ட் செய்றேன் தாத்தானு சொல்றான், உன் பொண்ணும் ப்ராஜக்ட் செய்றேன் தாத்தானு சொல்றா, அப்படி என்னதாமா அவங்க எல்லாரும் அந்த கம்ப்யூட்டர்ல பண்றாங்க?” என்று கேட்டார். பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை. “ஆமாம்பா நான் கேட்டாலும் அதை தான் சொல்லுவாங்க , என்ன செய்யறாங்கனு எனக்கும் தெரியாது,”என்று கூறினேன். அன்று பெயர் வைத்தேன் வார வாரம் இட்லி அரைக்கும் வேலை என் ப்ராஜக்ட் என்று.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செய்யும் ப்ராஜக்ட் தான் கடினமானது என்று இல்லை. வாராவாரம் இட்லிக்கு மாவு அரைப்பதும் அதைப்போன்றே கடினமான ஒன்று தான். என்ன இந்த ப்ராஜக்டில் நானே ப்ராஜக்ட் மேனேஜர், நானே டீம் லீட் . ஆல் இன் ஆல் அழகு ராணி நான் மட்டுமே. ப்ராஜக்ட் ப்ரோபோசல் போல் முதல் நாள் இருந்தே நான் நாளைக்கு மாவு அரைக்கப் போறேன், மாவு அரைக்கப் போறேன் என்று தனிக் காகமாய் கரைவேன். கேட்பார் யாரும் இல்லை. அது வேறு கதை. மறு நாள் மறக்காமல் அரிசி, உளுந்து கழுவி ஊற வைக்கவேண்டும். அதில் வெந்தயமும் சேர்த்து ஊற வைக்க மறந்துவிடக்கூடாது. ஊற வைத்ததை சாயங்காலம் மறக்காமல் க்ரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். சில நாட்கள் மறந்து போய் ப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு மறுநாள் காலை அரைத்ததும் உண்டு. க்ரைண்டரில் போடுவதற்கு முன் அந்த க்ரைண்டரை வேறு கழுவ வேண்டும். உளுந்தை முதலில் அரைத்துவிட்டு, பின் அரிசியை போட்டு அரைக்கவேண்டும். உளுந்து பொங்கி நுரைத்து வேறு இருக்கவேண்டும். ஒரு வழியாக அரைத்த மாவில் உப்பை போட்டு கரைத்து வைக்க வேண்டும். நானும் இருபது வருடங்களுக்கு மேலாக இந்த ப்ராஜக்ட்டை விடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனாலும் இந்த கரைத்து வைக்கும் வேலை எனக்கு பிடித்ததே இல்லை. கையை அரை முழம் அளவிற்கு மாவின் உள்ளே விட்டு கரைக்க வேண்டும். கை முழுக்க மாவு பூசிக்கொள்ளும். கையில் போட்டு இருக்கும் வளையலை கூட கழற்றி வைத்துவிடுவேன். கரண்டி கொண்டு கரைக்கலாம் என்று நினைத்தால் அப்படி செய்யக்கூடாது. நம் உடம்பின் சூடு பட்டால் தான் மாவு புளிக்கும் என்று அம்மா கூறிவிட்டாள். கரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
மறுநாள் பொங்கிவரும் பொழுது பாத்திரத்திற்கு வெளியில் வழிந்து விடாதபடி பாத்திரம் பெரிதாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பொங்கி வழிந்த மாவை வேறு வழித்து எடுத்து சுத்தம் செய்யவேண்டி வரும். நல்ல வெய்யில் காலம் என்றால் மாவு நன்றாக புளித்துவிடும். காலை எழுந்தவுடன் மறக்காமல் அதை எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து அடுத்த சில நாளுக்கு பாதுகாத்து வைக்கவேண்டும். மழைக்காலம் என்றால் பொங்காது . அரைத்து வைத்த மாவு அப்படியே அடக்க ஒடுக்கமாக ஊற்றி வைத்த அளவிலேயே இருக்கும்.
மாவு தான் ரெடி ஆகிவிட்டதே என்று நிம்மதியாக இருக்க முடியாது. யார் அந்த கிரைண்டரை கழுவுவது?. அந்த குழவியை எடுத்து அதில் உள்ள மாவை வழித்துவிட்டு அந்த சின்ன அடுப்படி சின்க்கில் கழுவுவது சிறு இடத்தில் கர்ணம் அடிப்பதற்கு சமம். முன்பெல்லாம் குழவி ஒன்று மட்டுமே இருக்கும். இப்பொழுது இரண்டு , சில க்ரைண்டரில் மூன்று கூட இருக்கிறது. என் பாட்டி குழவியை நார் வைத்து எளிதாக கழுவி விடுவாள். இப்பொழுது இருக்கும் குழவியையோ ப்ரஷ் வைத்து இண்டு இடுக்கெல்லாம் கழுவ வேண்டி இருக்கிறது.
நான் சிறுமியாக இருந்த பொழுது ஆட்டுக்கல் இருந்தது. குழவியை மட்டும் வெளியில் எடுத்து கழுவினால் போதும். ஆட்டுக்கல்லில் தண்ணீர் ஊற்றி கழுவி , அந்த தண்ணீரை முகர்ந்து வெளியில் ஊற்றிவிடுவோம். ஆட்டுக்கல் வீட்டுக்கு வெளியில் தான் இருக்கும். இப்பொழுது க்ரைண்டரை அடுப்பு மேடையிலேயே வைத்துக் கொள்கிறோம். இடம் இல்லை என்றால் மாவு அரைத்தப்பின் அதனை ஒரு கப்போர்டில் வைத்து விடுகிறோம். மாவு அரைத்தப்பின் அந்த ட்ரம்மையும் கழற்றி , கழுவ வேண்டும். வீட்டில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிட்டால்,”என்ன ரொம்ப அலுத்துக்கற, நீயா மாவாட்டற , ஸ்விட்ச்சைப் போட்டால் அது தானாக் சுத்துது,”என்பார்கள். அது தானாகத்தான் சுற்றுகிறது ஆனால் நாமும் அவ்வப்பொழுது தண்ணீர் போதுமானதாக இருக்கிறதா, மாவு ஒழுங்காக அரைபடுகிறதா, குழவி சுத்துகிறதா, என்று தலையை கவிழ்த்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். ஆர்வக்கோளாரில் கொஞ்சம் அதிகமாக அரிசி ஊறவைத்து விட்டால் இரண்டு முறை போட்டு எடுக்க வேண்டும். இதில் க்ரைண்டர் சூடாகாமல் வேறு கவனமாக இருக்க வேண்டும். க்ரைண்டர் சுற்றும் பொழுது மாவு சரியாக அரைபடுகிறதா என்று உள்ளே கையை விட்டு பார்க்கும் பொழுது விரல்கள் அரைபட வாய்ப்புக்கள் அதிகம். மிக்க கவனம் அவசியம். கழுவிய குழவி , ட்ரம்மை காயவைத்து மீண்டும் க்ரைண்டரில் வைத்து மூடி வைக்கவேண்டும். இல்லையேல் பல்லியின் குடியிருப்பாகிவிடும்.
இட்லி மாவு மட்டும் இல்லை என்றால் பல பேருக்கு கை உடைந்த மாதிரி .காலையில் என்ன டிபன் செய்வது என்று தெரியாது. கையை பிசைந்து கொண்டே இருப்பார்கள். ஆபீஸ், ஸ்கூல் என்று புறப்பட எல்லோரும் தயாராகி கொண்டிருக்கும் காலை கலேபரத்தில் இட்லி அல்லது தோசை தான் எளிதான டிபன். இதனால் தான் எவ்வளவு வேலை இருந்தாலும் வாரம் ஒருமுறை மாவு அரைக்கும் ப்ராஜக்டை நான் கைவிடுவதே இல்லை. போதாக்குறைக்கு சீரியல் சாப்பிடாதீர்கள், ப்ரெட் சாப்பிடாதீர்கள் என்று வேறு உபதேசங்கள் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. விருந்தாளி வந்தால் கூட மாவு இருந்துவிட்டால் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் போல ஒரு தனித் தெம்பே வந்துவிடும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு வாரமும் ப்ராஜக்ட்டை முடித்தால், காலையில் சாப்பிட வரும் பொழுது ,”இன்னைக்கு என்ன இட்லியா தோசையா,?”என்று குடும்பத்தில் உள்ள பல முகங்கள் சலிப்புடன் சுளிக்கும். மாவு அரைக்க நான் சலித்துக்கொள்வது இல்லை! ஒரே ப்ராஜக்ட்தான் ஆனால் ஒவ்வொரு நாளும் ப்ராஜக்ட் ரிலிஸ் வேறு வேறு உருப்பெறும். ஒரு நாள் இட்லி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் ஊத்தப்பம், ஒரு நாள் மசாலா தோசை, ஒரு நாள் பனியாரம் என்று பல ரூபங்கள் எடுக்கும்.
இந்த ப்ராஜக்டை நான் செய்வதற்கு எனக்கு எந்த விதமான அப்ரைசலும் இருந்தது கிடையாது. பொதுவாக வீட்டில் உள்ள க்யூ.டி டிபார்ட்மெண்ட் இட்லியையும் தோசையையும் க்வாலிடி ரிஜக்ட் செய்துவிடும். சரவணபவன் ஹோட்டல் தோசை, இட்லி போல் இல்லை. அங்கே சட்னியே அத்துனை விதம் இருக்கும் என்ற குறை.காலையில் உள்ள அவசரத்தில் வெந்தது பாதி வேகாதது பாதியாக கொடுக்காமல் முழுவதும் வெந்து கொடுக்கிறேனே என்று நினைப்பது இல்லை. என்ன புலம்பினாலும் இந்த வாரமும் என் ப்ராஜக்டை வெற்றியுடன் முடித்துவிட்டேன்!நானும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் “நானும் ப்ராஜக்ட் செய்கிறேன்”என்று!!!!!

Monday, March 12, 2018

அலங்கோலம்!!




அழகாய் புள்ளி வைத்து போட்ட கோலத்தை
மறுநாள் வாரி எடுத்து 
குப்பை மாவாய் 
பார்க்கும் பொழுதே
மனம் வலிக்கிறதே,
ஒரு சிறு புள்ளியாய்
தன்னுள் தோன்றி
அழகாய் உருப்பெற்ற
ஆசைக் கருவை,
பத்து மாதம்
மனதிலும் உடம்பிலும் சுமந்து
அன்பு மகளாய் வளர்த்தப்பின்
கொடியவன் ஒருவன்
கூறு போட,
அவள் உரு தெரியாமல்
அணு அணுவாய்,
குத்துயிரும் கொலை உயிருமாய்
அலங்கோலமாய்
சிதைந்து கிடக்க,
அக் கோலமகள்
மாக்கோலமா என்ன
கூட்டிப் பெருக்கி
குப்பையில் போட்டுவிட்டு
வேறு கோலம் போட???


Thursday, March 8, 2018

Woman's Day


Image result for pencil drawing of a woman






Woman's Day
When I see the wishes on this special day, I feel proud for a second to be born as a woman. All these wishes praise womanhood , their achievements, their sacrifices , their love, their motherhood, sisterhood, their perseverance, their mental strength, the goddess in them,their beauty! Yes women are worth all these praises. But not just these praises only on this special day. Is there a single day that passes without any physical, emotional, mental harassment of women? With your hands in your heart tell me is the disparity among men and women in all walks of life washed away? I know it will take not years but a century more for this to happen. But I wish it happens.I wish women are not just celebrated but let to live and move around freely in this society. Being a mother of a girl I always tend to be protective of my girl at every stage of her life.This is what the society has taught me to feel about the world I am born in. Be it a one year old baby or a sixty year old woman there is always a fear to walk alone without falling a prey in this world where a woman is seen as a product of beauty!
As long as women don't respect women we can't demand respect from the opposite sex. Freedom and liberation of women doesn't mean just dressing like how we want, pursuing a career of one's wish, getting married at a later age , using *** language in public, achieving in sports, etc etc. Freedom means coming out of shackles of backward thoughts, superstitions, thinking that outward beauty define's one's character and position, demeaning fellow women and ill treating fellow women..Liberate yourself from the thought of being judgmental and from being selfish. Lift up your fellow women and walk with them confidently . The lift can be a great emotional support when needed . It can be the moral support. It can be the confidence you build .It can be the positive vibes you create around you and them. Create happiness around you and walk hand in hand. Accept when the help arrives at your door . Be simple, plain, and open minded. Don't complicate relationships . Life is very beautiful if we all can feel the oneness among us. Enjoy womanhood each and every day! All I wish on this special day is a world where every woman can feel safe every second of their life!!

Thursday, March 1, 2018

மனிதம் மடிகிறது!

மனிதம் மடிகிறது!
குழந்தைகளாய் போன
முதியோரை கொன்று
எலும்புக் குவியலாய்
பாதாள பிணவறையில்
மறைத்து வைத்த
மனிதருள் மனிதம்
மடிந்துவிட்டது!
உடல் பிரிந்த உயிர் பார்க்க,
ஊர்வலமாய் உலாவந்த
உயிரற்ற உடலுடன்
செல்ஃபி எடுத்து
ஊருடன் பகிர்ந்த
மனிதருள் மனிதம்
மடிந்துவிட்டது!
பால்குடி மறவா குழந்தைகள்
ஓடிவிளையாடும் சிறார்கள்
கொஞ்சி பேசும் மழலைகள்
யாவரிலும்
பேதம் ஏதும் பாராமல்
குண்டு வீசி
தோலும் சதையும் பிய்யப் பிய்ய
ரத்தம் பார்த்து குதூகலிக்கும்
மனிதருள் மனிதம்
மடிந்து விட்டது!
பசிக்கு அரிசி திருடிய
மனநலமில்லா ஒருவனை
அடித்து கொன்று
ஆனந்தமாய் படம் பிடித்த
மனிதருள் மனிதம்
மடிந்து விட்டது!
தந்தை கை கத்தி
தான் வளர்த்த கோழியின்
கழுத்தை பதம் பார்க்குமோ
என அஞ்சி நடுங்கிய
சிறு குழந்தை,
அழுது ஆர்ப்பரித்து
கோழியை விடுவித்து
ஓடவிட்டு பெருமூச்சு விட்டு
பார்த்து ரசித்த போது
மழலையின் உருவில்
மனிதம் இன்றும் வாழ்கிறது!
குழந்தையாய் உள்ளவரை
ஒவ்வொருவுள்ளும் மனிதம்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!
மனிதனாய் வளர்ந்த பின் தான்
மனிதம் இங்கு மடிகிறது!!!